15602 மெல்ல நகும்.

கு.றஜீபன். சென்னை 600102: பூவரசி பதிப்பகம், C-63, முதல் தளம், அண்ணாநகர் கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (சென்னை 600102: பூவரசி பதிப்பகம், C-63, முதல் தளம், அண்ணாநகர் கிழக்கு).

61 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 22×14 சமீ.

ஏழாலை மண்ணின் மைந்தரான குலசிங்கம் றஜீபன்  எழுதிய கவிதைத் தொகுதி இது. ‘அனிச்ச மலரில் தெளித்த பனியாய் இருக்கும் அணங்கே, விடுகதைகள் போதுமடி உந்தன் விழிகள் கடுகளவும் கலப்படமில்லாத கவிதைகள் போல..’ என நீளும் இவரது கவிதைகளின் சுவை இனிமையானது. ஒவ்வொரு கவிதையின் இறுதியிலும் அதன் சாராம்சம் தடித்த எழுத்துக்களில் வருகின்றது. காந்தள் விழிகள், நாண நகை, களவுப் பார்வை, மொழிபேசும் விழிகள், காதல் போதை, தென்றலின் சினேகிதி, விழி வீச்சு, விழிகளில் எழுதும் கவிதை, கனி விழிகள், செவ்விளநீர் போல, சாதகப் பட்சி ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் முதன்மை உறுப்பினர்களுள் ஒருவரான இவர் மரபுக் கவிதைப் பயிலரங்கம் ஒன்றினை நடத்திவருகின்றார். அண்மையில் வெளிவந்த திருத்திய மீள்பதிப்பான ‘ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’ என்ற பாரிய தொகுப்பின் வெளியீட்டிலும் இவரது பங்கு கணிசமானது.

ஏனைய பதிவுகள்

16222 தோட்டத் தொழிலாளர் வீரப் போராட்டம்.

பி.ஆர்.பெரியசாமி. கொழும்பு 12: நல்வழிப் பதிப்பகம், 22. டயஸ் பிளேஸ், 1வது பதிப்பு, 1957. (கொழும்பு 12: என்.எஸ்.ஆர்.அச்சகம், 127, புதிய சோனகத் தெரு). 112 பக்கம், விலை: 50 சதம், அளவு: 22×15