15603  மேற்கில் உதித்த கதிரவன்.

இணுவிலான் சிகாகோ பாஸ்கர். சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல.2, 2ஆவது தளம், 1ஆவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை 600093: பூவரசி வெளியீடு, புஷ்பா காலனி, சாலிகிராமம்).

164 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-81322-09-3.

இதிலுள்ள கவிதைகள் ஆன்மீக அருட்டல்கள், தாய் மண் தாகம், வாழ்வின் வருடல்களும் வலிகளும் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. பிறந்த மண்ணைவிட்டுப் பிரிந்து 43 வருடங்கள் ஆன நிலையிலும் தாயக நினைவுகளைச் சுமந்து வாழும் இக்கவிஞர் தன் மனதில் முகிழ்க்கும் உணர்வுகளையும், எதிர்காலத்தின் பிரதிபலிப்பாகத் தோன்றும் கனவுகளையும், தூண்டுகோலாக வழிகாட்டி அரும்பும் சிந்தனைகளில் கோலமிடும் நினைவுகளையும், சின்னச் சின்ன ஆசைகளையும், மண்ணில் பதித்து வந்த சுவடுகளின் முனகல்களையும் ஏக்கங்கள், தாக்கங்கள் ஏற்றங்கள், ஏமாற்றங்கள், இன்னல்கள், இன்பங்கள், கோபங்கள், ஆத்திரங்கள், சிரிப்புகள் போன்றவற்றையும் தமிழால் வடிகட்டித் தன் கவிதைகளில் பொதித்துத் தந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67064).

ஏனைய பதிவுகள்

2000+ Gaming 2024

Aisé Super article à lire – Salle de jeu sans aucun Winorama calcule pourboire : SPOOKY-SPINS Les opportunités avec classe ainsi que de retrait í