15604 மௌன வாக்கிய மாலை: கவிதை-காண்பியம்-தியானம்.

யோகி (இயற்பெயர்: தஜேந்திரன்). யாழ்ப்பாணம்: பிரக்ஞை வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2020. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

36 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 16×13  சமீ., ISBN: 978-624-96568-0-2.

யோகி என்ற பெயரில் எழுதும் தஜேந்திரன் முதலாவதாக ஓர் ஆன்மீகவாதி. இரண்டாவதாக ஓர் ஓவியர். மூன்றாவதாக கவிஞர். எனவே அவர் கூட்டு ஒழுக்கத்துக்குரியவர். அவருடைய ஓவியம், கவிதை எல்லாம் அவரது ஆன்மீக தரிசனங்களின் வெளிப்பாடுகள்தான். இருப்பிலிருந்து இன்மைக்கும், பொருளிலிருந்து வெற்றிடத்துக்கும், அனல் மேனியிலிருந்து சாம்பலுக்கும் அல்லது நெருப்பிலிருந்து நீறுக்கும், நீறிலிருந்து பைரவத்திற்கும் சொல்லிலிருந்து மௌனத்திற்கும், மௌனத்திலிருந்து சொல்லுக்கும், முடிவில் கவிதைகளிலிருந்து காண்பியப் பரிசோதனைகளுக்கும், அல்லது காண்பியப் பரிசோதனைகளில் இருந்து கவிதைகளுக்கும் பயணிக்கும் ஒரு புதிய அனுபவத்தை இத்தொகுப்பு தருகின்றது. இந் நூலின் வடிவமைப்பிலும் புதியதொரு  முறை பின்பற்றப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Betting Fruit Zen real money

Posts And therefore Online casino games Appear in Maryland? Should i Play Casino games Inside the Massachusetts 100percent free Or A real income? Keno Playing