15610 யாழ்பாவாணன் கவிதைகள்.

மாதகல்வாசி காசி. ஜீவலிங்கம் (புனைபெயர்: யாழ்பாவாணன்). யாழ்ப்பாணம்: யாழ்பாவாணன் வெளியீட்டகம், மாதகல் கிழக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்).

xxxii, 33-152 பக்கம், விலை: ரூபா 450., இந்திய ரூபா: 130.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-941092-8-0.

யாழ்ப்பாணம், மாதகலூரில் 07.10.1969இல் பிறந்தவர் ஜீவலிங்கம். யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய உலகிலும் இணையத்தளத்திலும் உலாவருபவர். 1987 இல் இருந்து எழுதத் தொடங்கிய இவரது முதலாவது கவிதை ‘உலகமே ஒருகணம் சிலிர்த்தது’ என்ற தலைப்பில்  25.09.1990 அன்று ஈழநாதம் நாளேட்டில் வெளியாகியது. பின்னர் வீரகேசரி பத்திரிகையிலும் சில கவிதைகள் வெளியாகின. இறுதிக் கட்டப் போரின் பின் 05/11/2009 இற்குப் பிறகு கருத்துக்களம் (Forum), வலைப்பூ (Blog) போன்றவற்றில் தனது பதிவுகளை எழுதத் தொடங்கினார். ஆசிரியரின் 50ஆவது அகவையில் முதலாவது நூலாக இது வெளிவந்துள்ளது. இதில் 48 தலைப்புகளின் கீழ் இவரது கவிதைகள் ஒழுங்கமைத்துத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Free online Slot machines!

That have today’s technology, you can enjoy quickly from the web browser of your own laptop, computer system, mobile device, or pill. Gothic styled slots

14144 நக்கீரம் 1995.

பாலச்சந்திரன் கௌதமன் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் வீதி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).