நுஸ்கி இக்பால். காத்தான்குடி: இஸ்லாமிய இலக்கியக் கழகம், 150, கடற்கரை வீதி, புதிய காத்தான்குடி -3, 1வது பதிப்பு, மே 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xviii, 85 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19.5×14 சமீ., ISBN: 978-955-38092-1-6.
2012 முதல் தன் பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதைகளோடு உறவாடிவரும் நுஸ்கி இக்பால், கட்டிடத்துறையில் பொறியியல் பட்டம் பெற்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். சமுதாயத்தின் மீதான பற்றும் பாசமும் பிடிப்பும் இக்கவிஞனை பல்வேறு கோணங்களில் நின்றும் தட்டியெழுப்பி எழுதத்தூண்டி இருக்கிறது. அவசர வாழ்வியலில் சிக்கிப்போன கவிஞர் தன் நோக்காடு வேக்காடுகளை இலக்கியத்தில் மிதக்கவிடுவது அவரை ஒருபடி உயரத்தில் வைக்கிறது. அதீத பிரயத்தனங்களோடு அடிக்கடி கவிதைகளை லாவண்யமாக உருட்டி விளையாடும் கவிஞர் நுஸ்கி இக்பால் இத்தொகுப்பின் வழியாக 46 கவிதைகளை எமது நுகர்வுக்காக வழங்கியிருக்கிறார்.