முகமது அஸ்கர். இரத்தினபுரி: கல்லாறு வெளியீட்டகம், ஸ்டப்டன் தோட்டம், இறக்குவானை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (யாழ்ப்பாணம்: குரு அச்சகம், திருநெல்வேலி).
xxii, 86 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×12.5 சமீ., ISBN: 978-955-38496-0-1.
நான், தமிழோடு விளையாடு மனமே, உழைப்பே உயர்வு, கருகிய மலர் சிரிக்கிறது, சிறகொடிந்த பறவை யாரம்மா?, தூரத்து நிலா, விளையும் பயிர், தேம்பியழும் சுவர்கள், யார் குற்றம், ஒரு மயிலிறகால், விரியப் போராடும் அரும்புகள், பாலஸ்தீனக் குரல், குருவிக்கூடு, காணி நிலம் வேண்டும், கடல்வாழ் காகித ஓடம், முகிலின் துளிகள், சீர்வரிசை எனும் சீதனம், என் உயிர் தங்கை, கடைசி முத்தம், உயிருள்ள மரணம், வறுமை விலகாதோ, புறப்படு புதுமைப் பெண்ணே, வடுக்கள், காணாமல் போன கனவுகள், உண்மைநட்பு, தோட்டத்தொழிலாளிகள், பெண்ணினக் கொடுமை, வட்டியில்லா கடன், மீளாத மியன்மார்ப் படகுகள், உழவனின் உழுத மனம், மொட்டின் மொழி, வறுமை விலகாதோ, அவசரக் கல்யாணம், சதுரங்க வேட்டை, இறுதி நாழிகை என்று சமூகக் கவிதைகள், பொருளாதார, அரசியல் மற்றும் காதல் கவிதைகள் என அனைத்தும் தற்காலத்தின் நிலைமையை உரையாடும் பாங்கில் கவிதைகளாக அமைந்துள்ளன. கவிஞன் எனும் கவிதையில் அஸ்கர் கவிதைக்கு பின்வருமாறு வரைவிலக்கனம் கொடுக்கின்றார் ‘கவிஞனின் கற்பனைக்கு இலக்கணம் கற்பிக்க முடியாது. இது தான் அதுவென்றாலும் அது கவிதான்’ என்று கூறுகிறார். இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் கல்வி பயிலும் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் முகமது அஸ்கரின் கன்னி கவிதைத் தொகுப்பாகும்.