15619  விழிகள் தேடும் விடியல்.

கவிச்சாரல் சாரா (இயற்பெயர்: முஹம்மத் சமுஹ{ன் பாத்திமா சஹாரா). ஒலுவில்: மாணவர் பேரவை, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரப மொழி பீடம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (அக்கரைப்பற்று -02: சிற்றி பொயின்ற் பிரின்டர்ஸ், 78/1, உடையார் வீதி).

xxiv, 96 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-627-132-4.

கவிச்சாரல் சாரா புத்தளம் மாவட்டத்தில் புளிச்சாக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர். தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட மாணவியாக இருந்த வேளை எழுதிய கவிதைகள் இவை. தனது சமகாலத்தைப் பிரதிபலிக்கும் இக்கவிதைகளில் வறுமை, சமூக அவலங்கள், இயற்கை அம்சங்கள் போன்றவற்றை பேசுபொருளாக்கியுள்ளார். இஸ்லாமிய கோட்பாடுகளையும், பெண்உரிமையையும் நாசூக்காக முன்வைக்கின்ற சில கவிதைகளையும் இத்தொகுப்பில் காண முடிகின்றது.

ஏனைய பதிவுகள்

16825 கலித்தொகை வசனம்.

ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை (மதராஸ்): ஒற்றுமை ஆபீஸ், இல.8, வியாசராவ் தெரு, தியாகராய நகர், 1வது பதிப்பு, 1941. (அச்சக விபரம் தரப்படவில்லை). vii, 262 பக்கம், விலை: இந்திய ரூபா 1-8-0, அளவு: 19×13