15621 வெயிலில் ஒரு வீரப்பழம்.

ஜே. வஹாப்தீன். ஒலுவில்-3: ஜே.வஹாப்தீன், 64, பழைய தபாலக வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (அக்கரைப்பற்று -02: சிற்றி பொயின்ற் பிரின்டர்ஸ், 78/1, உடையார் வீதி).

xxv, 26-160 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-52409-4-9.

தென் கிழக்குப் பிரதேசத்தின் ஒலுவில் மண்ணில் பூத்த இலக்கிய மலர் இது. தன் மண்ணையும் மக்களையும் பாடும் 78 கவிதைகளுடன் (ஆசிரியரின் மொழியில் தனது மண்ணின் ஒப்பாரிகள்) வெளிவந்துள்ளது. ஜே.வஹாப்தீன், கவிஞரும் நாவலாசிரியரும் ஒலிபரப்பாளருமாவார்.  வஹாப்தீனுடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பு இது. அவரது முதலாவது கவிதைத் தொகுப்பு ‘வேரில்லா பூச்சியங்கள்” வழமைபோல ஏனைய கவிஞர்களுடைய முதல் தொகுப்பைப்போல பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக வெளிவந்தது. அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘அஷ்ரப் எனும் தீ’, மூன்றாவது ‘வெட்டுக் கற்கள்’ என்ற குறும்பா கவிதைத் தொகுப்பு, நான்காவது ‘கண்ணாடிக் குளத்துக் கவிதை’ என்ற கவிதைத் தொகுப்பு சற்று வித்தியாசமாகவும் கனதியாகவும் வெளிவந்திருக்கின்றது. ஐந்தாவதாக வெளிவந்துள்ள ‘வெயிலில் ஒரு வீரப்பழம்” தொகுப்பில் உள்ள கவிதைகள் பிரதேச மணம் கமளுகின்றவையாக எழுதப்பட்டுள்ளன. 

ஏனைய பதிவுகள்

Gamble Online Dining Battle Slots

Articles Payment Steps Simple tips to Enjoy Special Symbols inside Dinner Struggle Position Game Then you better hop out particular room for dessert as well,

15108 கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம்: வரலாறும் வழமைகளும்.

நிலாந்தினி செந்தூரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).