15623 வேர் அறுதலின் வலி.

மொஹமட் அன்சீர். சுவிட்சர்லாந்து: Mohamad Anseer, Bad strasse 6, 6423 Seewen, இணைவெளியீடு, வத்தளை: யாழ்ப்பாண முஸ்லீம் இணையத்தளம், 48, பேர்சி டயஸ் மாவத்தை, மாபோல, 1வது பதிப்பு, 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).

127 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0930-00-5.

வடபுல முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 21 வருட நிறைவைப் பதிவுசெய்யும் நோக்குடன் யாழ். முஸ்லீம் இணையத்தளத்தால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் கவிஞர்களின் இணைந்த 55 கவிதைகளின் தொகுப்பே இந்நூலாகும். அனைத்தும் இனவாதம் கடந்து புலம்பெயர்தலின் வலிகளைப் பேசுகின்றன. உலகின் எந்தத் தேசத்துக்கு ஒருவன் புலம்பெயர்ந்தாலும் தாயக மண்ணின் நினைவுகள் புலம் பெயர்வதில்லை என்ற உண்மை இக்கவிதைகளில் உரத்து ஒலிக்கவே செய்கின்றது. இந்த வலி, புலம்பெயர்ந்து வாழும் யாழ். முஸ்லிம் இணையத்தளத்தின் இயக்குநரும் ஊடகவியலாளருமான மொகமட் அன்சீர் போன்ற புகலிட இஸ்லாமியத் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் சொந்த நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்து அகதிகளாகிப் போன உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான மக்களுக்கும்; பொதுவானதாகவே அமைந்துள்ளதை இக்கவிதைகள் அழுத்தமாகச் சொல்கின்றன.

ஏனைய பதிவுகள்

Spin The newest Wheel

Articles Casino All Slots slots: Best Free Spin Casino Incentives 🏆 Best 100 percent free Spins No Wagering Gambling establishment Sites Money Learn free spins