ஞானம் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 112 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-8354-61-2.
ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சி 14ஆம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கிறது. இதற்குப் பிற்பட்ட காலங்களில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் பெரும்பாலம் தமிழ் கலாசார பாரம்பரியங்களை பறைசாற்றும் வண்ணம் எழுந்துள்ளன. அத்தகைய ஒரு நூலினைப் பற்றியஆய்வாகவே இந்நூல் அமைகின்றது. தாலம் என்றால் பனை என்று பொருள்படும். ஈழமக்களுக்கும் பனைமரங்களுக்கும் இடையிலுள்ள நீண்ட உறவு குழந்தையின் பிறப்பு முதல் முதுமையில் மரணம் வரை நீண்டது. 18ம் நூற்றாண்டில் உருவான தாலவிலாசம் என்ற நூல் பற்றிய அறிதல் பலரிடமும் காணப்படாமையால், அந்நூல் பற்றிய அரிய பல தகவல்களைச் சேகரித்து பூரணமானதொரு பதிவினை ஆசிரியர் முன்வைத்துள்ளார். பனை பற்றிய விபரங்களை இலக்கிய வடிவில் தரும் புதுவகை நூலாக விளங்கும் தால விலாசம் பற்றி முதன்முதலாக அறியத்தந்த சைமன் காசிச்செட்டிக்கு இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரசுரம் ஞானம் வெளியீட்டகத்தின் 38ஆவது நூலாகவும், ஈழமும் தமிழும் என்ற தொடரில் நான்காவது நூலாகவும் அமைந்துள்ளது.