15632 ஐங்குறுநூற்று அரங்கம்.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2008. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ).

400+44 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 20.00, அளவு: 21×14 சமீ.

எட்டுத்தொகையுள் மூன்றாவது ஐங்குறுநூற்று அரங்கம் நாடகத் தமிழ் வடிவில் ஒரு இலக்கிய நூலாய்வாக இங்கு விரிகின்றது. முதலாவது காட்சி ஐங்குறுநூறு என்னும் நூல் நாடகமாக்கப்படவேண்டிய காரணத்தைத் தெளிவாக்குகிறது. இண்டாம் நாடகத்தில் இந்த நூலின் ஏட்டுப் பிரதியைக் கண்ணுற்ற டாக்டர் உ.வே.சாமிநாதையர் இதை எவ்வாறு முதன்முதல் அச்சிற் பதிப்பித்தார் என்ற செய்தி சொல்லப்படுகின்றது. மூன்றாவது பகுதி இந்த நூலையிட்டுத் தற்காலத்து அறிஞர்களின் எண்ணங்களையிட்ட ஒரு கண்ணோட்ட நாடகம் இடம்பெறுகிறது.  இறுதியாகப் பண்டைக் காலத்தில் இந்த நூலை யார் தொகுத்தார், யார் தொகுப்பித்தார் என்ற வரலாறு கூறப்படுகிறது. இந்த நாடகங்களின் மூலம் ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தின் பின்புலத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளமுடிகின்றது. அத்தோடு நூலாய்வு முழுமையுறும் பகுதியான முல்லை எழினியில் தற்காலச் சந்ததியினர், பண்டைய இலக்கியங்களால் ஏற்படும் பயன் என்ன எனக் கேட்கும் ஐயத்தைத் தெளிவிக்கும் வகையில் நாடகங்கள அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப எழினி, மருத எழினி, நெய்தல் எழினி, குறிஞ்சி எழினி, பாலை எழினி, முல்லை எழினி ஆகிய தலைப்புகளின் கீழ் இவை இந்நூலில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4068). 

ஏனைய பதிவுகள்

Tips gamble Bohnanza Formal Laws

Content What is Bonanza RTP? By simply following these types of tips and understanding the added bonus words, you may enjoy to try out nice