15635 சட்டத்தின் திறப்புவிழா: வானொலி நாடகங்களின் தொகுப்பு.

 மறவன்புலோ செல்லம் அம்பலவாணர். கொழும்பு 15: மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: கே.ஜே.என்டர்பிரைசஸ், 63, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை).

xxx, 238 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-42626-1-4.

மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், 1992 முதல் 2015 வரை இலங்கை வானொலியில்  ஒலிபரப்பாகிய தனது நாடகங்களில் தேர்ந்த ஒன்பது  முப்பது நிமிட நாடகங்களை நூல்வடிவில் தந்திருக்கிறார். இவை சட்டத்தின் திறப்புவிழா (இலங்கை வானொலியில் ஒலிபரப்பான ஆசிரியரின் முதல் நாடகம்), காயாத வடுக்கள், இருபது ரூபா நோட்டு, செய்வினை, தகைமை, மயிர்க்கொட்டிகள், பெட்டிசம், பெறுமதி, அறுவடை (2013ஆம் ஆண்டு ரோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் அகில இலங்கை ரீதியில் நடத்திய நாடகப் பிரதி எழுதும் போட்டியிவ் முதலாமிடத்தைப் பெற்றது) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

11535 இராமோதந்தம்.

அ.குமாரசுவாமிப் புலவர் (மொழிபெயர்ப்பு). சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம். 6வது பதிப்பு, பெப்ரவரி 1949. 1வது பதிப்பு, ஜனவரி 1922, 2வது பதிப்பு, மே 1931, 3வது பதிப்பு, 1932, 4வது பதிப்பு,

12071 – சைவ போதினி-ஐந்தாம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 7வது பதிப்பு, டிசம்பர் 1972, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1960, 2வது பதிப்பு, நவம்பர் 1961, 3வது பதிப்பு, ஜுலை 1964,