15636 சதுரங்க வேட்டை (நாடகத் தொகுப்பு).

சிவ. ஏழுமலைப்பிள்ளை. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 116 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4676-70-1

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை மண்ணின் மயிலிட்டிக் கிராமம் கலை இலக்கியத்துக்கு வழங்கிய நல்முத்துக்களில் ஒருவரே சிவ.ஏழுமலைப்பிள்ளை. 1970களின் இறுதியில் இலங்கை-இந்திய கூட்டுத் தயாரிப்பில், நடிகர் ரஜனிகாந்தின் நடிப்பில் வெளிவந்த ‘தீ’ திரைப்படத்தில் நடித்தவர். இவரது மூன்றாவது நூலாக சதுரங்க வேட்டை மூன்று நாடகங்களின் தொகுப்பாக அமைகின்றது. மகாபாரதத்தின் ஒரு பாகமாக ‘சதுரங்க வேட்டை’ அமைகின்றது. தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் என்ற பொருளில் இந்நாடகம் நகர்த்தப்படுகின்றது. இரண்டாவது நாடகம் ’இராம வீரம்’ என்பதாகும். இராமாயண இதிகாசத்தின் ஒரு பகுதி இந்நாடகமாகும். ‘மருதுபாண்டியர்’ என்ற மூன்றாவது நாடகம் வெள்ளையர்களை எதிர்த்து சிவகங்கையின் பாண்டிய மன்னர் போராடிய கையாகும். கல்வித்துறையில் நாடகப் பயிற்சிகளுக்கு வேண்டிய இதிகாச நாடகங்களின் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் இவரது நாடக நூலின் வருகை அமைந்துள்ளது. இது ஜீவநதியின் 84ஆவது வெளியீடு.

ஏனைய பதிவுகள்