குப்பிளான் இரா.பொன்னையா. யாழ்ப்பாணம்: செல்வி பொ.பொன்னம்மா, மந்திரை, குப்பிழான்-ஏழாலை, 1வது பதிப்பு, ஆடி 1989. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி).
(8), 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5சமீ.
யாழ்ப்பாணக் குடா நாட்டில் வலிகாமம் தெற்கில் அமைந்துள்ள பழங்கிராமம் குப்பிளான். சைவ மணங் கமழும் இக்கிராமத்தில் கோயில் வழிபாட்டோடியைந்ததாக கிராமிய நாடகமும் வளர்ந்து வந்திருக்கிறது. இக்கிராமத்தில் வாழ்ந்த நாடகப் புலவர்கள், அண்ணாவிமார் பலராவர். வைத்தியர் கந்தர் அம்பலம், அம்பலம் பீதாம்பரம், இராமநாதன் பொன்னையா போன்றோர் அவர்களுட் சில சிறந்த நாடகப் புலவர்களாவர். 90 ஆண்டுகள் வரை வாழ்ந்து 1955இல் மறைந்த இராமநாதன் பொன்னையா ஆசிரியர் 1945இல் முதன்முதலில் இந்நாடகத்தை மேடையேற்றியிருந்தார். பின்னர் அவரது மறைவின் பின்னர் 1958இல் குப்பிழானில் மீண்டும் மேடையேற்றப்பட்டது. அதுவரை அச்சில் வெளிவந்திராத இந்நாடகத்தின் எழுத்துருவை அவரது இளையமகள் தற்போது நூலுருவில் வெளியிட்டுள்ளார். விக்னேஸ்வரர், சுப்பிரமணியர், தெய்வயானை, கட்டியக்காரன், சூரன், மந்திரி நாரதர், சிங்கமா சூரன் ஐயனார், பானுகோபன், அசைமுகி, துன்முகி, இந்திரன், இந்திராணி, வீரவாகு, சயந்தன், வீரமாகாளன் ஆகியோர் இந்நாடகத்தின் கதாபாத்திரங்களாவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 74244).