15640 நகல்: தெரிவுசெய்யப்பட்ட நாடகப் பிரதிகளின் தொகுப்பு.

த.கிஷாதனன், அ.ஜோன் போல் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 7: இந்து மாணவர் மன்றம், றோயல் கல்லூரி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

230 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18 சமீ., ISBN: 978-955-4547-00-1.

றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தினர், 2012இல் தமது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி தீவு பூராகவுமுள்ள நாடக எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட நாடக எழுத்துருக்கள் சிலவற்றைத் தொடுத்து மாலையாக்கி நாடக கலைத்தாய்க்கு அணியாக சூட்டியுள்ளார்கள். ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் தொடங்கும் இம்மலரில், நாடகப் போட்டித் தெரிவுக்குழுவினரால் தெரிவுசெய்யப்பட்ட நாடகங்களான இருபது ரூபா நோட்டு (மேடை நாடகம்)/மறவன்புலோ செல்வம் அம்பலவாணர், ஒரு பின்னம் முழுமையடைகின்றது (நாடகம்)/செல்வி முஹம்மது ஜலால்டீன் பாத்திமா சுமையா, காட்டில் ஒரு களியாட்டம் (சிறுவர் நாடகம்)/கனக மகேந்திரா, இளங்கோவின் துறவு (நாடகம்)/சுப்பிரமணியம் சிவலிங்கம், மன்னிப்போம் மறப்போம் (சிறுவர் நாடகம்)/ ல.அம்லானந்தகுமார், நோன்பு (நாடகம்) /திருமதி ராஷிதா மொஹமட் இர்ஷாத், சிகரங்களாகும் மனிதங்கள் (நாடகம்) ஃதிருக்கோயில் யோகா யோகேந்திரன், தீர்ப்பு (இசை நாடகம்) / மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், கருவறையிலிருந்து (நாடகம்)/கந்தையா ஸ்ரீகந்தவேள், அழிவைத் தேடும் உலகம் (யதார்த்த விரோதபாணி சிறுவர் நாடகம்) /இளையதம்பி குகநாதன், அகல் விளக்கு (நாடகம்)/செல்வி கிருபரெத்தினம் அஸ்வினி, உறவுகள் (நாடகம்)/செல்வி சந்திரசேகரன் ஹர்ச்சனா, இருளினை நீக்கி (சிறுவர் பா நாடகம்)/எஸ்.ரி.குமரன் ஆகிய நாடகங்களும், தொடர்ந்து இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட நாடகப் பிரதிகளான தேனீ (நாடகம்)/செல்வி ராமச்சந்திரன் ராதிகா, வரக்கூடாத வறுமை (நாடகம்) /கி.கிருஸ்ணபிரசாத், வினைப்பயன் (நாடகம்) /திருமதி அனுராதா பாக்கியராஜா, இரு கோடுகள் (நாடகம்) /வி.விஜயகுமார், உறவுகள் (நாடகம்) /செல்வி த.திரேசா, விடியலின் வெளிச்சம் (நாடகம்) /செல்வி முஹம்மது நிஹார் பாத்திமா சாஜிதா, சிதறிய சிற்பி (நாடகம்) /ஆரோக்கியம் எட்வேட், விதி (நாடகம்) / செல்வி மொஹமட் அனீஸ் பாத்திமா அம்ரா, புட்டிப்பால் (தாளலய நாடகம்) /கனக மகேந்திரா ஆகிய நாடக எழுத்துருக்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12214).

ஏனைய பதிவுகள்