15645மஹாகவி நாடகங்கள்.

து.உருத்திரமூர்த்தி (மூலம்), எம்.ஏ.நுஃமான் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மஹாகவி நூல்வெளியீட்டுக் குழு, இணை வெளியீடு, பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளை யார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 298 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-01-7.

மஹாகவியின் (1927-1971) ஐம்பதாவது நினைவுதினத்தினை முன்னிட்டு வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் மஹாகவி எழுதிய கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று ஆகிய மூன்று மேடைப் பா நாடகங்களும், திருவிழா, கோலம், பொய்மை, சேனாபதி, வாணியும் வறுமையும், அடிக்கரும்பு ஆகிய ஆறு வானொலி நாடகங்களும் தொகுக்கப்பெற்றுள்ளன. பின்னிணைப்புகளாக, முன்னைய பதிப்புகளுக்கென மஹாகவி எழுதிய ஆறு முன்னுரைகளும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து ‘பா நாடகங்கள்: சில கோட்பாட்டுப் பிரச்சினைகள்’, ‘ஈழத்துப் பாநாடகங்கள்’, ‘மஹாகவியின் சிறு நாடகங்கள்’ ஆகிய ஆக்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல் 186ஆவது ஜீவநதி பிரசுரமாக வெளியீடு கண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

14125 கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேக மலர்.

மலர்க் குழு. கொழும்பு: தர்மகர்த்தா சபை, புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில், 1வது பதிப்பு, பெப்ரவர் 1992. (அச்சக விபரம் தரப்படவில்லை). 85 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீ.