சூ.ஆரோக்கியநாதன். பருத்தித்துறை: சூ.ஆரோக்கியநாதன், லூர்துமாதா கோவில், தும்பளை, 1வது பதிப்பு, 1983. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்).
(7), 44 பக்கம், விலை: ரூபா 9.00, அளவு: 21.5×14.5 சமீ.
ஆறு அங்கங்களைக் கொண்ட நாடகம். கி.மு. 102 இல் பிறந்த ஜ{லியஸ் சீஸர் கி.மு. 55 தொடக்கம் கி.மு. 44 மார்ச் 15 வரை சர்வாதிகார ஆட்சியொன்றை ரோமாபுரியில் நடத்தி வரலாற்றில் இடம்பெற்றவன். அவனது வரலாற்றை வாசிப்பதற்கும் நடிப்பதற்கும் ஏற்றவாறு இந்நூல்வடிவில் ஆசிரியர் உருவாக்கியுள்ளார். ஜுலியஸ் சீஸர், புரூட்டஸ், மார்க்ஸ் ஆன்ரனி, கைசியஸ், காஸ்கா, அக்டாவியஸ் சீஸர், கலிபோர்னியா, போர்சியா ஆகிய கதாபாத்திரங்களை இந்நாடகத்தில் உலாவவிட்டுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14117).