15652 ஞானப் பழம்: பாநாடகம்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல.85, கந்தசுவாமி கோவில் வீதி).

94 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-7654-13-3.

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரின் 37ஆவது வெளியீடு இது. இரண்டு காட்சிகளைக் கொண்ட பாநாடகமான ‘ஞானப்பழம்’ இதில் முதலாவதாக வருகின்றது. அதனைத் தொடர்ந்து பன்னிரு காட்சிகளைக் கொண்ட ‘ஞானக் குழந்தை’ இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. மூன்றாவதாக ‘நாமார்க்குங் குடியல்லோம்’ பா நாடகத்தினை சூலை நோய் நீங்கப்பெற்றுச் சைவத்திற்கு மீண்ட நாவுக்கரசரின் அதிகார வர்க்கத்துக்கு அடிபணியாத புரட்சிக் குரலாக பதிவுசெய்திருக்கிறார். ‘நம்பி ஆரூரர்’ பாநாடகம், பெரியபுராணத்து தடுத்தாட்கொண்ட புராணக் கதையின் பாநாடக வடிவமாகும். நம்பியாரூரரான சுந்தரரின் கதையின் ஒரு பகுதி இங்கு சுவைமிகு பாநாடகமாகியிருக்கிறது. இத்தொகுதியில் இறுதியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள பா நாடகம் ‘பிட்டுக்கு மண்சுமந்த பெருமான்’ என்பதாகும். கடவுள் மாமுனிவரது திருவாதவூரடிகள் புராணத்தின் பிட்டுக்கு மண் சுமந்த சருக்கத்தில் இருந்தும் திருவிளையாடற் புராணத்தின் மண் சுமந்த படலத்திலிருந்தும் இப்பாநாடகத்திற்கான கதை பெறப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66989).

ஏனைய பதிவுகள்