15653 தங்கத்துரைக் காவியம்.

மூதூர் எம்.எம்.ஏ.அனஸ். மூதூர்: உமர் நெய்னார் புலவர் கழகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (திருக்கோணமலை: ART பிரின்டர்ஸ்).

92 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-42444-4-3.

மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் அவர்களின் இருபதாவது நூலாகவும், இவர் எழுதிய நாயகக் காவியம், அஷ்ரப் அமர காவியம், வாப்ப மரைக்கார் வழிக் காவியம், ஊர் துறந்த காவியம் ஆகிய நான்கு காவியங்களைத் தொடர்ந்து ஐந்தாவது காவிய நூலாகவும் அமைந்துள்ளது. முன்னாள் மூதூர் தொகுதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான அமரர் அ.தங்கத்துரை அவர்களின் வாழ்வும் பணிகளும் இக்காப்பியத்தின் வழியாகப் போற்றப்படுகின்றன. 1936 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் மூதூரில் கிளிவெட்டி என்ற ஊரில் பிறந்தவர் அருணாசலம் தங்கத்துரை (17.01.1937-05.07.1997).

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அப்போது இருந்த மூதூர் தொகுதில்; இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1970 முதல் 1977 வரை மூதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1994 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருக்கோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தங்கத்துரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் அக்கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற ஒரு வன்முறைச் சம்பவத்தில் இவரையும் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு திருக்கோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் எட்டு மாதங்கள் சிறையில் இருந்து பின்னர் விடுதலையானார். 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு திருக்கோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரங்களை அடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருக்கோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியைத் துறந்தார். 1994 இல் திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு அம்மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டு சூலை 5 ஆம் நாள் திருக்கோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்குபற்றிய போது இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார். இவருடன் கல்லூரி அதிபர், உட்பட ஐவர் உயிரிழந்தனர்.

ஏனைய பதிவுகள்

Darmowe Automaty Hazardowe 77777

Content Dokąd Potrafię Poznać Szczegóły Na temat Bonusu Wyjąwszy Depozytu? Albo W Automatach Egipskich Można Odgrywać Na temat Bardziej wartościowe Wygrane? Jak Wskazane jest Odgrywać