சுப்பிரமணியம் சிவலிங்கம். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 261/1, திருமலை வீதி).
204 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-4628-49-6.
தர்மம் தழைக்க கிருஷ்ண பரமாத்மா அருளிய இதோபதேசத்தை காவியமாக்கியிருக்கிறார் தொழிலால் பொறியியலாளராகவும் உள்ளத்தால் ஆன்மீக இலக்கியவாதியுமான கலாபூஷணம் சுப்பிரமணியம் சிவலிங்கம் அவர்கள். கீதையின் தத்துவத்தை இவர் தெளிவாக்க கற்று அதனை எளிய நடையில் புதுக்கவிதைப் பாணியில் இங்கு காவியமாகப் படைத்துள்ளார்.