15659 மீளப்பறக்கும் நங்கணங்கள்: நவீன காவியம்.

பாலமுனை பாறூக். பருத்தித்துறை:  ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xiv, 66 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-62-7.

கவிஞர் பாலமுனை பாறூக் அவர்கள் 1970களில் இலக்கியப் பிரவேசம் செய்தவர். கடந்த ஐந்து தசாப்தங்களாக கவிதைகள் எழுதிவரும் இவர் இதுவரை எட்டு கவிதை நூல்களை வெளியிட்டவர். ஒன்பதாவது நூலாக இவர் எழுதி வெளிவருகின்ற நான்காவது குறுங்காவியம் இதுவாகும். அகமது மாஸ்டரின் வாழ்வியலினூடாக ஆசிரியர் ஒருவரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் காவியம் இது. ஆசிரியர் மாண்பு எவ்வாறிருக்க வேண்டும் எனக் கதையோட்டத்தினூடாக வலியுறுத்திச் சொல்கிறது. ஆசிரிய சேவையில் இடமாற்றம் காணும் போதெல்லாம் குடும்பத்துடன் ஆசிரியர் இடம்பெயர வேண்டியிருந்த நிலைமையையும் பிறந்த ஊரில் படித்த பிள்ளைகள் உயர் கல்விக்காக வெவ்வேறிடங்களில் உள்ள பாடசாலைகளில் சேர்ந்து முயன்று கற்ற நிலைமையையும் கவிஞர் பாறூக் எளிமையாகவே எடுத்துரைக்கிறார். ஏற்கெனவே இவரது குறுங்காவியங்கள் கொந்தளிப்பு, தோட்டுப்பாய் முத்தம்மா, எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு ஆகிய தலைப்புகளில் வெளிவந்துள்ளன. இந்நூல் 176ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Spielbank Provision bloß Einzahlung Beste Angebote

Content Tagesordnungspunkt Register ihr besten Online Casinos abzüglich Erlaubnis Beste Casinospiele ohne Einzahlungsbonus Ihr klares, übersichtliches Anschluss stellt unserer Meinung nach kernstück einer modernen Casino-Applikation

14701 திருந்திய உள்ளங்கள்: சிறுகதைத் தொகுதி.

அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2015. (திருக்கோணமலை: சண் பிரிண்டர்ஸ், 224, மத்திய வீதி). xii, 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.,