பாஸிரா மைந்தன் (இயற்பெயர்: ஏ.சீ.எம். நதீர்). கம்பொல: சலனம் வெளியீடு, 48/A-1, கம்பொலவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2018. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ், 30/7, 5ஆவது ஒழுங்கை, அம்பகஹபுர).
104 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×13 சமீ., ISBN: 978-955-3736-00-0.
வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்வுகள் எம்மைக் கடந்து செல்கின்றன. அவை சந்தோஷத்தை, சோகத்தை, ஆத்திரத்தை, அழுகையை, புன்னகையை ஏற்படுத்திச் செல்கின்றன. சில போது அழகிய நினைவாக அவை மனதில் சேகரமாகின்றன. மற்றும் சிலபோது ஆறாத காயமாக மனதில் பதிந்துவிடுகின்றன. அத்தகைய நிகழ்வுகளும் சம்பவங்களுமே இங்கு கதைகளாக மொட்டவிழ்ந்துள்ளன. இத்தொகுதியிலுள்ள கதைகள் 2005ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவை. நிலவோடு கதை பேசி, வண்டிக்காரன், அப்துல்லாஹ்வின் மனவெளி, இந்த சில நாட்களாய், குர் ஆன் குர் ஆன், சிறு துளி கண்ணீர், மூக்குக் கண்ணாடி, அவரைத் தூங்க விடுங்கள், கூட்டாஞ்சோறு, உரிமைகோரல், குரங்கு சேட்டை, குழந்தைகளுக்கு மட்டுமே சிரிக்கத் தெரியும், பால்மா வாங்கிட்டு வாங்க, துயரத்தை யாரும் விரும்புவதில்லை, மழை பெய்கின்றது, அது ஒரு காலம், அவள் எப்படிச் சொல்வாள், நீதம், இலக்கு, உப்புல தேசிக்காய் ஆகிய தலைப்புகளில் இதிலுள்ள 20 கதைகளும் எழுதப்பட்டுள்ளன.