தர்காநகர் சுலைமா சமி இக்பால். மாவனல்ல: எக்மி பதிப்பகம், 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, 1வது பதிப்பு, ஜுன் 2018. (மாவனல்ல: பாஸ்ட் கிராப்பிக்ஸ், ஹஸன் மாவத்தை).
xxiv, 127 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-1825-15-7.
நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் வலம்வரும் படைப்பாளி தர்காநகர் சுலைமா சமி இக்பால். 1987இல் இவரது ‘வைகறைப் பூக்கள்’ சிறுகதைத் தொகுதி முதலில் வெளிவந்தது. தொடர்ந்து ‘மனச் சுமைகள்’ (சிறுகதை, 1988), திசை மாறிய தீர்மானங்கள் (சிறுகதை 2003), ஊற்றை மறந்த நதிகள் (நாவல், 2009), நந்தவனப் பூக்கள் (சிறுவர் கதைகள், 2013) ஆகிய நூல்களை வழங்கியிருந்தார். தற்போது வெளிவந்துள்ள ‘உண்டியல்’ சிறுகதைத் தொகுதியில் இவரது பின்னைய காலகட்டப் படைப்பாக்கங்களான உண்டியல், ஊனம், குருவியே குருவாக, மனித நேயம், சுமை, மனிதம் மரணிப்பதில்லை, இங்கேயும் ஒரு ஹஜ், பலிக்கடாக்கள், கல்லுக்குள் ஈரம், வாழ்க்கை வட்டம், இவர்களும் மனிதர்களே, சமுதாயமே பதில் சொல், தாயை தத்தெடுத்தவர்கள், இதயத்தைத் தொலைத்தவர்கள், தொப்பி, தாயின் பயணம், மனிதம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 17 கதைகள் இடம்பெற்றுள்ளன.