15682 உள்ளே இருப்பது நெருப்பு (சிறுகதைகள்).

தேவி பரமலிங்கம் (இயற்பெயர்: த.பரமலிங்கம்). யாழ்ப்பாணம்: நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: போஸ்கோ அச்சகம், 252 பருத்தித்துறை வீதி, நல்லூர்).

vi, (4), 94 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ.

உள்ளே இருப்பது நெருப்பு, முகில்கள் கலைகின்றன, இல்லாதது இருக்க நியாயமில்லை, சிலுவைப்பாடு, வெல்லப்படுகின்ற நியாயங்கள்,  சூரியன் மறைகிறான் நாளையும் விடிவதற்காக,  ஒரு கூட்டம் வலை களவுபோகிறது, அக்கினி நிலம், நிவாரணம், பூபாளம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற பத்து சிறுகதைகளின் தொகுப்பே இந்நூலாகும். நூற்றுக்கும் கொஞ்சம் குறைவான சிறுகதைகளை எழுதியுள்ள ஆசிரியர் தனது 14 கதைகளைத் தொகுத்து 2014இல் ‘புதிய படைப்புலகம்’ என்ற தொகுதியை வெளியிட்டிருந்தார். இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும். மக்களை இயல்பு வாழ்க்கையில் புதிய நாகரீக தரிசனத்துடன் வாழ வழிவகுக்கும் நோக்கத்தில் இவரது கதைகள் எழுதப்படுவதாக ஆசிரியர் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்