எம்.ஐ.எம்.அஷ்ரப். சாய்ந்தமருது 7: எம்.ஐ.எம்.அஷ்ரப், 489, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (சாய்ந்தமருது: எக்ஸலன்ட் பிரின்ட்).
xiv, (2), 17-131 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-44371-2-8.
கவிஞராகத் தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய கலாசார உத்தியோகத்தர் ஜனாப் எம்.ஐ.எம். அஷ்ரப் அவர்களின் 11 சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும். இதனாலோ என்னவோ இவரது கதைகளிலும் ஆங்காங்கே கவிச்சுவையும் இணைந்து கொள்கின்றது. இதில் வாணி அவள் வாழப் போகிறாள், விடுதலை கிடைத்த போது, கலைந்துபோன ஆசைகள், முற்பகல் செய்யின், புதிர் விலகிய நேரம், உறங்காத உண்மைகள், தொடர்ந்து வந்த ஏமாற்றங்கள், சாதி சகுனம், அவளின் உறுதி, புது வாழ்வு, நல்ல மனங்களின் சந்திப்பு ஆகிய தலைப்புகளில் இவை வெளிவந்துள்ளன. இக்கதைகளில் பெரும்பாலும் காதல் தான் அடிநாதமாக உள்ளது.