மா.சிவசோதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
viii, 96 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-49-8.
கிராமத்து மனிதர்கள், கிராமத்துக் காட்சிகள், கிராமத்துக் களங்கள், கிராமத்து பேச்சு வழக்குகள், கிராமத்து பழமொழிகள் என விரியும் கிராமத்துச் சித்திரங்களாக அமைந்த 13 சிறுகதைகளை இத்தொகுப்பில் மா.சிவசோதி தந்திருக்கிறார். அப்பாச்சி, உறவுகள் சேர்ந்தது, மீண்டெழுதல், ஒரு முழங் கயிறு, கிழக்கு வெளிக்கும், துயரத்தின் நிழல், மனச்சிறை, நாளைய பொழுதுகள், நாளை விடியும், கடைக்குட்டி, திசை மாறிய பறவைகள், கைதியின் உறவுகள், படையல் ஆகிய 13 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது 161ஆவது ஜீவநதி வெளியீடாகும்.