எம்.அப்துல் றஸாக். அக்கரைப்பற்று -01: பெருவெளி பதிப்பகம், 31 சீ, உபதபாலக வீதி, பதூர் நகர், 1வது பதிப்பு, மார்ச் 2017. (அக்கரைப்பற்று -02: சிற்றி பொயின்ற், 78/1, உடையார் வீதி).
(12), 13-108 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-42878-1-5.
கடந்த பத்தாண்டுக் காலத்தில் ஆசிரியரால் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பான இந்நூல் ஏழாவது பெருவெளி பதிப்பக வெளியீடாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையின் பின்னாலும் ஏதோ ஒரு அரசியல், சுயநலம் இருப்பதை ஆசிரியர் ஏற்றுக்கொள்கிறார். அரசியல் செய்வதிலும், சுயநலமாக வாழ்வதிலும் பார்க்க கதைகளின் மூலம் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துகொள்கின்ற போக்கு இக்கதைகளைத் தொகுத்து வாசிக்கும் வேளை புலப்படுகின்றது. இத்தொகுப்பில் நிழல்களின் வடு, மரணத்திற்குப் பின்னரான கொலை மற்றும் தற்கொலை, காலத்தின் மீதேற்றி வாசிக்கப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகள்: உபதலைப்பு- சதுரங்கம், உதைபந்தாட்டம், சூதாட்டம், கனவுகளின் காலம், வீட்டுக் குறிப்புகள்- 19, செம்மணத்தி, கணையாழிக் கனவு, ஞானத்தின் சாரம் அல்லது கழிவறை ஞானம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஒன்பது கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.