ஏ.பீ.எம். இத்ரீஸ் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஆதிரை வெளியீடு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர்).
228 பக்கம், விலை: இந்திய ரூபா 180.00, அளவு: 20×13 சமீ.
ஏ.பி.எம். இத்ரீஸ் தொகுத்து வெளியிட்டுள்ள இச் சிறுகதை தொகுப்பினுள் 18 சிறுகதைகள் உள்ளன. கதைகள் அனைத்தும் பத்திரிகையாளர்களாக, கவிஞர்களாக, சிறுகதை எழுத்தாளர்களாக, பேராசிரியர்களாக இயங்கிவரும் முஸ்லிம் மற்றும் தமிழர்களால் எழுதப்பட்டுள்ளன. இனமுரண்பாடு தீவிரமாகவிருந்த மிக முக்கியமானதொரு காலத்தின் அரசியலைப் பேசக்கூடிய சிறுகதைகள் இவை. காயங்களை ஆற்றும் கதைகள் என்ற தலைப்பில் ஏ.பி.எம். இத்ரீஸ் அவர்களின் முன்னுரையுடன், பனிமலை (ஆ.ஐ.ஆ.றஊப்), ஹனீபாவும் இரண்டு எருதுகளும் (குமார் மூர்த்தி), துணிச்சல் (வ.அ.இராசரத்தினம்), என்ட அல்லாஹ் (சக்கரவர்த்தி), மெய்ப்பட புரிதல் (பி.ரவிவர்மன்), துயருறுதல் (முல்லை முஸ்ரிபா), குளங்கள் (அம்ரிதா ஏயெம்), ரெயில்வே ஸ்ரேஷன் (ஓட்டமாவடி அறபாத்), மூன்றாவது இனம் (ஆ.மு.ஆ.ஷஹீப்), யார் அழித்தாரோ? (எஸ்.நஸீறுதீன்), கரு நிழலில் கரைந்து (து.ஆ.ஜெஸார்), வண்ணான் குறி (எஸ்.நளீம்), நிழல்களின் வடு (எம்.அப்துல் றஸாக்), குதர்க்கங்களின் பிதுக்கம் (மிஹாத்), சோனியனின் கதையின் தனிமை (மஜீத்), சூன்யப் பெருவெளிக் கதைகள் (ஆ.ஐ.ஷாஜஹான்), வெள்ளைத் தொப்பி பற்றிய வேதனையூட்டும் அறிக்கை (ஸபீர் ஹாபிஸ்), மே புதுன்கே தேசய (ஜிப்ரி ஹாஸன்) ஆகிய 18 சிறுகதைகளும் இறுதியில் பண்பாட்டுப் பதவிளக்கமும் தரப்பட்டுள்ளன.