மு.தயாளன் (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்). மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜ{லை 2019. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
96 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-4041-17-2.
மகுடம் வெளியீட்டகத்தின் 22ஆவது வெளியீடாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இதில் தனது வாழ்க்கை அனுபவங்களைச் சுற்றி எழுதப்பட்ட ஒரு லண்டன் பொடியன், அப்பா போட்ட குடிசை, ஆசிரியம், கண்ணீரிலெழுத்து, தெளிவு,நொண்டி,லியோ என்னும் ஒரு நாய்குட்டி, கருவறை, மூன்று மரங்கள், நான் நல்லவள் ஆகிய பத்துச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மகுடம் பதிப்பகம் வெளியிடும் தயாளனின் நான்காவது நூல் இது.