15691 ஒரு வீணை அழுகின்றதே: சிறுகதைத் தொகுப்பு.

கமலினி கதிர். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xii, 110 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4676-75-6.

இந்நூலில் சமூக சீர்திருத்தத்தை அவாவி நிற்கும் சிறுகதைகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஒரு பிறைநிலா பௌர்ணமியாகின்றது (வானவில் 2012), தாய் மண்ணைத் தேடி (தமிழன் 24, ஆடி 2016), கொஞ்சம் வழிவிட்டுச் செல்லுங்களேன் (தமிழ் விதை, ஜுலை 2012), அந்நிய மண்ணில் ஓராலயம், நல்லதோர் வீணை செய்தே (ஆய்த எழுத்து, ஆனி 2011), பூம்பனியாய், நெஞ்சில் ஒரு முள், உறவு என்ற சுமை, நிறம் மாறாமலிருக்க (தமிழன் 24, 2016), ஒரு வீணை அழுகின்றதே (தமிழ் விதை, ஏப்ரல் 2012) ஆகிய 10 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கமலினியின் இக்கதைகள் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பல சமூக ரணங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. நமக்குக் கிட்டிய வாழ்வை மன மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வாழும் வழிகளை இக்கதைகள் நமக்குச் சொல்கின்றன. இந்நூல் 86ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. தன் பள்ளிப் பருவத்திலிருந்தே சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டிவந்த திருமதி கமலினி, இலங்கையில் இருந்தபோது வீரகேசரி, ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் தன் படைப்பாக்கங்கள் பிரசுரமாகக் கண்டு மகிழ்ந்தவர். இலங்கை வானொலியில்  ‘வாலிபர் வட்டம்’, ‘இசையும் கதையும்’ போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத் தன் படைப்புகளை வானலையில் கேட்டு மகிழ்ந்தவர். இனக்கலவரங்களின் பாதிப்பால் அவற்றை இழந்து துயர்கொண்டவர். பின்னர் சூரிச் நகரில் வாழும் போதும் அவரது எழுத்துப்பணியை தொடர்ந்துவருகின்றார். பல்வேறு சஞ்சிகைகளில் தனது கவிதைகளையும் சிறுகதைகளையும் வெளியிட்டுவந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்