15692 கட்டடக்கா(கூ)ட்ட முயல்கள்: புகலிட அனுபவச் சிறுகதைகள்.

வ.ந.கிரிதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 166 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-08-6.

இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் இறுதியில் அமைந்துள்ள சுமணதாஸ பாஸ் என்ற தலைப்பிலான குறுநாவலைத் தவிர ஏனையவை கனடாவிலுள்ள டொராண்டோ மாநகரில் வாழும் இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் பல்வேறு வகையான புகலிட அனுபவங்களை மையமாகக் கொண்டவை. ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை, ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன், மனைவி, மனித மூலம், கணவன், மான்ஹோல், சுண்டெலிகள், பொந்துப் பறவைகள், கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள், யன்னல், புலம் பெயர்தல், சீதாக்கா, நடுவழியில் ஒரு பயணம், சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை, தப்பிப் பிழைத்தல், சொந்தக்காரன், நீ எங்கிருந்து வருகிறாய், ஆசிரியரும் மாணவரும், வீடற்றவன், மனோரஞ்சிதம், யமேய்கனுடன் சில கணங்கள், கலாநிதியும் வீதிமனிதனும், காங்ரீட் வனத்துக் குருவிகள், Where are you from? பொற்கூண்டுக் கிளிகள், குறுநாவல்: பிள்ளைக் காதல், குறுநாவல்: சுமணதாஸ் பாஸ் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 27 கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 194ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

14682 ஈழத்து உளவியற் சிறுகதைகள்.

கே.எஸ்.சிவகுமாரன் (ஆசிரியர்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: