15693 கதைத் தொகுப்பின் கதை: சிறுகதைகள்.

லெ.முருகபூபதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xxxiv, 142 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-00-0.

ஈழத்து இலக்கிய உலகில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர் முருகபூபதி. மல்லிகை ஜீவா அறிமுகப்படுத்திய இவர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து மெல்பேர்னில் (அவுஸ்திரேலியா) வசித்து வருகிறார். கடந்த அரை நூற்றாண்டு காலமாக எழுத்தூழியத்தில் ஈடுபட்டு வரும் முருகபூபதி படைப்பிலக்கியவாதியாகவும், ஊடகவியலாளராகவும் இயங்கிவருபவர். தனது சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும்

இரண்டு தடவைகள், இலங்கையில் தேசிய சாகித்தியவிருது பெற்றவர். இந்நூல் முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதியாகும். இதில் கணங்கள், ஏலம், கதைத்தொகுப்பின் கதை, பார்வை, காத்தவராயன், எங்கோ யாரோ யாருக்காகவோ, தினம், அம்மம்மாவின் காதல், எங்கள் ஊர் கோவூர், நேர்காணல், காதலும் கடந்து போகும், தாத்தாவும் பேத்தியும், அவள் அப்படித்தான், கொரொனாகால உறவுகள், நடையில் வந்த பிரமை ஆகிய 15 கதைகள் இடம்பெற்றுள்ளன. இவரது படைப்பிலக்கிய இரசிகர்களின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 189ஆவது ஜீவநதி பிரசுரமாக வெளியீடு கண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70021).

ஏனைய பதிவுகள்

勝利 すべてのオンラインカジノでの実質収入

ブログ ペンシルベニア州内のカジノの費用 一言で言えば: アリゾナ州ベッティング エクスカーション オハイオ州内でのプレー利益に税金を課す必要がありますか? ギャンブル施設の試合 より良いギャンブル ゲーム 本物のお金の賭け 必須のパッケージはなく、リアルマネーで楽しむために改善する義務はありません。