கலாலக்ஷ்மி தேவராஜா. யாழ்ப்பாணம்: கலா லயம் பதிப்பகம், இல.68, நீதிமன்ற வீதி, மல்லாகம், 1வது பதிப்பு, மார்ச் 2021. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
228 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ.
செம்மனச் செல்வி என்ற புனைபெயரில் கலாலக்ஷ்மி தேவராஜாவின் கதைகள் ஒக்டோபர் 2017இல் மகரகாவியம், பூமராங், ரோசாப்பூ ஆகிய நூல்கள் மறுமலர்ச்சி மன்ற வெளியீடாக வந்தன. இக்கதைகள் சமூக சாதிய பெண்ணிய அடக்குமுறைகளை சாடுவனவாக அமைந்திருந்தன. 28.3.2019இல் அவரது மறைவின் முதலாமாண்டு நினைவாக வெளிவந்த அவரது கதைகளையும், கையெழுத்துப் பிரதிகளாக இருந்த மேலும் சில கதைகளையும் சேர்த்து அவரது மறைவின் இரண்டாம் ஆண்டு நினைவாக இந்நூலை வெளியிட்டுள்ளார்கள். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அமைந்த 27 கதைகளும் மகரகாவியம் என்னும் குறுநாவலும், பிற குறிப்புகளும் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. பிஞ்சுகள், பிள்ளைக்கறி, ஞானப்பழம், புரிதல், செல்விருந்தும் வருவிருந்தும், இரத்த உறவுகள், பற்று, ஒரு ஒப்புதல் வாக்குமூலம், பக்கத்து சீற்றில பாட்டி உட்கார்ந்தா அல்லது மாற்றங்களை வேண்டி, ஒரு டாக்குத்தரின் டயறியிலிருந்து ஒரு பக்கம், அங்கிடுதத்திகள், கந்தசஷ்டியும் கணவனும், விக்ரோறியா, இறுதி விருப்பம், பூமராங், மெசி ஒவ்வா நன்றி பொயிற்று வாறன், எங்கள் ஊர் சாமி, எல்லை தாண்டல், அம்மா அறிவது, பிளீஸ் கிவ் மீ 20000 றுப்பீஸ், துளசி, ஓ சாறா றீற்றா, இராஜதிருமணம், ஆண்டாள் பாசுரங்கள், றோசாப்பு, மயிர் நீப்பின் அல்லது இடைவெளி, ஆச்சியும் மண்ணாங்கட்டியும், மகரகாவியம், குறிப்புகள், ஒஸ்ரியோ ஆதரைட், திண்டாட்டம், நான் யார் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் இடம்பெற்றுள்ளன.