எம்.ஐ.எம். றஊப். கல்முனை: முனைப்பு வெளியீடு, பொது நூலக வீதி, மருதமுனை, 1வது பதிப்பு, 1992. (சாய்ந்தமருது: எவர்ஷைன் அச்சகம்).
xviii, 112 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 17×13 சமீ.
இத்தொகுப்பில் மஞ்சள் சோறு (மல்லிகை 01.01.1980), வாழ்வைப் புரிந்துகொள்ள முந்தி (வீரகேசரி 09.02.1980), இன்னும் வட்டத்துள் (வீரகேசரி 18.05.1981), நீளுகின்ற இருப்பு (வீரகேசரி 08.09.1980), தனக்குள்ளே ஒரு தரிசனம் (வீரகேசரி 13.03.1980), நொண்டிக் கனவுகள் (வீரகேசரி 05.06.1981), இவனுக்குத் தானே அபத்தமாய் (புதுசு 02.12.1981), முன்னிரவுகளும் ஒரு பின்னிரவும் (வீரகேசரி 11.05.1982), வெறுமையும் நிறைவும் (வீரகேசரி 02.06.1983), இடையில் வெளிகள் (முனைப்பு 15.02.1980), ஆகாசத்திலிருந்து பூமிக்கு (கீற்று 15.02.1982), 48 மாதங்களும் 15 நாட்களும் (வியூகம் 19.06.1988) ஆகிய பன்னிரு சிறுகதைகள் அடங்கியுள்ளன. மருதூர்க் கொத்தன் முக்கியமான ஈழத்துச் சிறு கதை எழுத்தாளர்களுள் ஒருவர். 1960, 70 களின் ஈழத்துச் சிறுகதை உலகில் பிரபல்யமான எழுத்தாளராகவிருந்த அவரது மூத்த மகனே எம்.ஐ.எம். றஊப். சமகால ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களுள் கவனத்துக்குரிய இவர் தனது முதல் கதையை-மஞ்சள் சோறு- 1980 ஜனவரி முதல்திகதி எழுதியிருக்கிறார். சிறுகதைத் துறையில் இவர் பிரவேசித்து ஒரு தசாப்தம் முடிந்து விட்ட நிலையில் இத்தொகுப்பு வெளிவந்துள்ளது. கடந்த பத்து வருடகால அறுவடையே இந்தத் தொகுதியில் உள்ள கதைகள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14781).