மிருசுவில் தமிழ்தாசன். சாவகச்சேரி: மிருசுவில் தமிழ்தாசன், 17, பன்றிக்கேணி வீதி, மீசாலை கிழக்கு, மீசாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (மீசாலை: சக்தி பதிப்பகம், ஏகாம்பரம் வீதி, மீசாலை கிழக்கு).
viii, 104 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-42283-1-3.
சூழ்நிலைக் கைதிகள், கேள்விச் செவியர், தன்னினம், பாவங்கள் உறங்காது, குருட்டு வாழ்க்கை, ஐயர் கடைத் தோசை, ஒருவனுக்கு ஒருத்தி, நாய் வால்கள், குடும்ப வாழ்க்கை, காகிதக் கப்பல்கள், நம்பிக்கைகள், பபாக்கா, குரங்கு மனம், தாமரை இலைத் தண்ணீர், கடவுளே கைவிட்டால் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பதினைந்து கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அனைத்தும் சமூக நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் சிறுகதைகள். கதைகளின் இடையே ஆங்காங்கே கையாளப்படும் இலக்கியச் செய்திகள், அற்புதமான உவமைகள், பழமொழிகள், சமயம் சார்ந்த சொல்லாடல்கள் என்பன ஆசிரியரின் மொழியாட்சிக்கு சான்று பகர்வதுடன் கதைகளுக்கும் மெருகூட்டுகின்றன. கடினமான, கனத்த பல நிகழ்வுகளை நகைச்சுவையினூடே அவர் கடந்து செல்கிறார். சமூகப் பிறழ்வுகளை, அரசியல் சார்ந்த அவலங்களை- அழகுற எடுத்துக் காட்டி, தனக்குள்ள சமூக அக்கறையையும் ஆங்காங்கே வெளிக்காட்டியிருக்கிறார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 75765).