வெற்றிச்செல்வி. சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர்).
96 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-942420-2-4.
உலகறிந்த, உன்னதமான ஒரு போராட்டத்தைச் சுமந்த போராளிகளைப் பற்றிய எளிமையான சித்திரங்கள் இக்கதைகள். அதிகமாகப் பேசப்படாத, அறியப்படாத போராளிகளின் கதைகளை அறியுமொரு திறவுகோல் தான் குப்பி. ஈழத் தமிழ் இனத்திற்காகத் துப்பாக்கிகளைச் சுமந்த போராளிகளின் வாழ்வின் பக்கங்கள் இவை. காட்டுராணி, உறுதி வார்த்தை, காருண்யம், கடலரசி, தமிழவள், கடிதக் காதல், துணிவு, போர்க்காலப் பிரசவம், கவிச்சுடர், மரணச் செய்தி, காந்தி, ஆட்சேர்ப்பு, பசுமதி, சாதனா, மாதுமை, அருணா, தம்பி, வீரன், துலாஞ்சலி, உயிர்விடும் முன், மாதவன், அண்ணன் தங்கை, காவு வண்டி, கல்விக்கு முதலிடம், மேஜர் அருணா, குமரன் புத்தகசாலை, இடப்பெயர்வு முத்தங்கள், மதி, இருப்பு, கோடுகள் மரமாகின்றன ஆகிய 30 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சக தோழர்கள் மீது கொண்ட நட்பு, கையறுநிலையில் உள்ள எதிரிமீது அவர்கள் காட்டும் கருணை, மரணத்துள் வாழ்தல், போர்க்களத்தின் கண்ணியமான கடமைகள் என்று இக்கதைகள் முழுவதும் ஒப்பற்ற விடுதலைப் போராளிகளின் புனித முகங்கள் தான் அசைகின்றன.