15701 கூடிழந்த குருவிகள்: சிறுகதைகள்.

ஏ.சீ.அப்துல் றகுமான். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2018. (திருக்கோணமலை: பென் விஷன் அச்சகம், 15/5, ஹஸ்கிசன் வீதி).

x, 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4628-54-0.

இத்தொகுப்பில் பிரியாவிடை, கூண்டுக்கிளி, புதிய பாதை, கட்டெறும்புகள், கூடிழந்த குருவிகள், விதியின் வழியே, மாறிடும் உலகம், நேர்மையின் பரிசு, காலம் கடந்த ஞானம், மனிதாபிமானம், விடுதலை, தாய்ப்பாசம், வேர்களை அறுத்த மரம் ஆகிய 13 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஏறாவூரில் பிறந்த கலாபூஷணம் ஏ.சீ.அப்துல் றகுமான், கிழக்கிலங்கையின் பிரபல இலக்கிய ஆளுமையாகக் கருதப்படுபவர். 1975 காலகட்டத்தில் சிந்தாமணி, மித்திரன், தினகரன் போன்ற ஊடகங்களில் தனது கவிதைகளை எழுதிவந்தவர். பின்னாளில் சிறுகதைத் துறையிலும் நாடகத் துறையிலும் ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தியவர். 50இற்கும் மேற்பட்ட நாடகங்களையும் இவர் மேடையேற்றியவர்.

ஏனைய பதிவுகள்

12046 – இந்து மதம் என்ன சொல்கிறது: பாகம் 4: இறை நோக்கிய பயணம்.

திருமதி. ஞானம் ஞானசேகர ஐயர். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 136 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14