ச.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2015. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
viii, 88 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-955-4676-34-3.
ஜீவநதியில் முன்னர் பிரசுரமாகிப் பாராட்டுப் பெற்றிருந்த பதினொரு கதைகளின் தொகுப்பு இது. ஜீவநதியின் 48ஆவது வெளியீடாக இது வெளிவந்துள்ளது. போர்க்காலத்தில் மக்கள் எதிர்கொண்ட அவல வாழ்வினை வெளிச்சமிட்டுக் காட்டுவதுடன் அந்த அவலங்களிலிருந்து மீண்டெழ வைப்பதற்கான உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டும் வகையில் கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஏற்றம், குழந்தைகள் உலகம், பேய்களுக்குப் பயமில்லை, சோகத்தைச் சுமப்பவர்கள், விலகிடும் திரைகள், சிரித்து வாழ வேண்டும், கால தரிசனம், சோகங்களும் சுமைகளும், நாய் வால், சின்ன வீடு-பெரிய வீடு, கோடை மழை ஆகிய தலைப்புகளின்கீழ் பிரசுரமான கதைகள் இவை.