வண.T.S.யோசுவா. கிளிநொச்சி: காவேரி கலாமன்றம், ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம்தரப்படவில்லை).
v, 162 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-7825-02-1.
சாமி, மக்கள், ஆட்சி, சந்தனம் மிஞ்சினால், பட்டி, நாணயம், அணில்கூடு, வீரத்தாய், ஊறுகாய், மருந்து ஆகிய பத்துக் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கைப் பாதையில் நாம் பதித்த தடங்களை பலவிதமான கோணங்களில் சிறுகதைகள் எனக் கூறக்கூடிய வடிவத்தில் பத்துப் பாகங்களாக பதிவு செய்துள்ளார். புனைவுசார் வடிவங்களாக இக்கதைகள் வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் சம்பவங்கள் காட்சிகள் யாவும் புனைவுசாரா உண்மைச் சம்பவங்களேயாகும். வண. T.S.யோசுவா அவர்களின் பட்டறிவு களங்கள், சமூக அபிவிருத்திக்குத் தேவையான செயற்திட்டங்கள் ஆகியவை இக்கதைகளின் ஊடாக சொல்லப்படுகின்றன. பொருளாதார ரீதியான கட்டுமானங்கள் அபிவிருத்திகள் நிறையவே நாட்டில் நடக்கும் இவ்வேளையில், வாழ்க்கைத்தரம் மலையளவு உயர்ந்துவிட்டது. ஆனால் மனிதர்களது பணத்தைச் சுரண்டும் நவீன காலனித்துவ சிந்தனைகள் இக்கதைகளின் ஊடாக கண்டிக்கப்படுகின்றன.