மு.சிவலிங்கம். கொட்டகலை: குறிஞ்சித் தமிழ் இலக்கிய மன்றம், தமயந்தி பதிப்பகம், 56, ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 131 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-52818-2-9.
சிறுவர் பண்ணைகள், உயிர்ப்பிச்சை, பூச்சிகள், கங்காணித்துவங்கள், பயணங்கள் முடிவதுண்டு, மறந்துபோன துயரங்கள், சிறுமை கண்டு, முதுமை எனும் பூங்காற்று, அம்மாவும் மழையும், ஒரு துப்பாக்கியின் கண்ணீர், கவர்ன்மென்ட் ட்ரீ, மஞ்சள் கோடுகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இச்சிறுகதைகள் எழுத்தாளர் மு.சிவலிங்கத்தின் பார்வையில் மனித மனங்களை வகுத்தறிந்து காட்ட முனைகின்றது. மனித அபிமானம், மனித நேயம், மனித பலஹீனம், மனித கயமை, மனித வைராக்கியம், மனித பாமரம், மனிதத் துயரம், மனிதத் துரதிர்ஷ்டங்கள், மனித எழுச்சிகள் எனும் உணர்வுகளின் செயற்பாடுகள் தனி மனித வாழ்க்கையில் குடும்பத்தில் சமூகத்தில் படிந்து நிற்கும் நிதர்சனங்களை மு.சிவலிங்கம் முன்வைத்துள்ளார். இது தமயந்தி பதிப்பகத்தின் இரண்டாவது நூல்.