15710 சுருதி மாறிய புல்லாங்குழல்.

தேனூர் கௌசிகன் (இயற்பெயர்: கந்தசாமி கௌசிகன்). மட்டக்களப்பு: வெளியீட்டுக் கழகம், தேனூர் தமிழ்ச் சங்கம், தேற்றாத்தீவு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (வவுனியா: ஓல் இன் வன் அச்சகம்).

(14), 77 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-3782-00-7.

இந்நூலில் தேனூர் கௌசிகனின் விளையும் பயிர், முயற்சி தவறேல், திறமைக்கே முதலிடம், எழுத்தாளன், உயர்வானது காதல், சுருதி மாறிய புல்லாங்குழல், மனம் கொண்ட மாங்கல்யம், மித்திரர்கள், எப்போது விடியும், முற்பகல் செய்வதே பிற்பகலும், பசி, வாழ நினைத்தால் வழியுண்டு ஆகிய பன்னிரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு தேற்றாத் தீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் தேனூர் கௌசிகன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீட மாணவராக இருந்த வேளை அவரது முதலாவது நூலாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

16731 ஆதுரசாலை (நாவல்).

சிவ.ஆரூரன்;. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 212 பக்கம், விலை: ரூபா