எம்.இந்திராணி. மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2009. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
162 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-8715-49-9.
இத்தொகுதியில் அநாதையொருவனின் கல்விக்கு உதவும் மற்றொரு அநாதையின் கதையான ‘செந்தாமரைப் பூக்கள்’ (வீரகேசரி 20.09.1992), போதை வஸ்துவினால் பாழாகும் இளைஞர் வாழ்க்கை குறித்த ‘வண்டரித்த குருத்து’ (வீரகேசரி 25.09.1994), தாயின் அரவணைப்பு கிடைக்காமையால் மனநோயாளியாகும் ஒரு மகனின் கதையான ‘ஒரு தாயின் தவறு” (வீரகேசரி 29.09.1990), ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டிய ஆசிரியர்களின் கதையான ‘பள்ளிக்கூடப் புதிர்’ (வீரகேசரி 13.02.1994), வெளிநாட்டு மோகம் கொண்டு அலைபவருக்கான படிப்பினை தரும் ‘மூளைச் சலவை’ (வீரகேசரி 28.02.1993), ஒரு தோட்டக்காரனின் மகிமையை உணர்த்தும் ‘காலத்தால் அழியாத கல்யாணம்’ (வீரகேசரி 26.04.1992), சொந்த ஊரின் மகத்துவத்தை உணரும் மனிதர்களின் கதையான ‘பூமாலைக்கு உரியவர்’ (உதயன்-சஞ்சீவி 29.04.2000), போர்க்காலத்தில் இடம்பெயர்ந்து, ஒரு வேளை உணவுக்கு அல்லாடும் எம்மவர்களின் சோகத்தைக் கூறும் ‘வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ (வீரகேசரி 08.10.1995), நமது பெண்களின் கலாசாரப் பண்பாடு பற்றி பெருமை கொள்ளும் ‘தப்புக் கணக்கு’ (யாழ் வானொலி 2003), வெளிநாடுகளுக்குச் சென்று சுகபோகம் அனுபவிக்கும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்த பெற்றோர்கள் தாயகத்தில் அனுபவிக்கும் மன உளைச்சலைக் கூறும் ‘இவர்கள் தான் அனாதைகள்’ (வீரகேசரி 30.05.1993), ஏழைக் குடும்பத்தில் எழும் திருமணப் பிரச்சினை பற்றிப் பேசும் ‘கோபிக்கிறாள் ஒரு குமரிப்பெண்’ (வீரகேசரி 03.10.1993), அகதி வாழ்வின் ஒரு பக்கத்தை விபரிக்கும் ‘புதுவேஷம்’ (வீரகேசரி வைகாசி 1996) ஆகிய தனது சிறுகதைகளை தொகுத்து வழங்கியுள்ளார்.