ஆர்.எம்.நௌஸாத். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
100 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-4676-57-2.
இந்நூலில் ஒய்த்தா மாமா, கள்ளக்கோழி, மறிக்கிடா, பொன்னெழுத்துப் பீங்கான், அணில், தீரதம், காக்காமாரும் தேரர்களும், மும்மான், கபடப் பறவைகள், ஆத்துமீன் ஆசை ஆகிய 10 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சாய்ந்தமருதுவில் பிறந்த கவிஞரும், சிறுகதை, புதின எழுத்தாளருமான நௌஸாத், தீரன் என்ற புனைபெயரிலும் எழுதுபவர். அஞ்சல் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1978 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவர் தூது என்ற பெயரில் கவிதைச் சிற்றிதழ் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். வல்லமை தாராயோ.. (சிறுகதைத் தொகுதி, 2000), வெள்ளிவிரல் (சிறுகதைத் தொகுதி, 2011), பள்ளிமுனைக் கிராமத்தின் கதை (2003), வானவில்லே ஒரு கவிதை கேளு (2005), நட்டுமை (புதினம், 2009), கொல்வதெழுதுதல் 90 (புதினம், 2013), வக்காத்துக் குளம் என்பவை இவர் எழுதிய பிற நூல்களாகும்.