15716 தேயாத நிலவுகள்: சிறுகதைத் தொகுப்பு.

ஆரபி சிவஞானராஜா. யாழ்ப்பாணம்: ஆரபி சிவஞானராஜா, முகிழ்நிலை ஆசிரியை, தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஆடி 2005. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி பிரின்டர்ஸ், தாவடி).

(8), 35 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

இந்நூலில் மாற்றங்கள் இங்கே மறுப்பதற்கில்லை, மனங்கொத்தி மனிதர்கள், இந்தப் பூக்கள் பறிப்பதற்கல்ல, தேயாத நிலவுகள், அவர்களும் மனிதர்கள் தான் ஆகிய ஐந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆரபி சிவஞானராஜாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இது. மனிதர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒரே மாதிரி நடந்துகொள்வதில்லை. அவர்களின் உணர்வு வெளிப்பாடுகளும் எப்போதும் ஒரே மாதிரியானவையுமல்ல. மனித உணர்வுகளுக்கும் அறிவுக்கும் இடையே நடக்கும் போட்டியில் வெற்றிபெறுவது எதுவோ அதன் வழியே மனித வாழ்க்கை தடம்மாறி விடுவதுண்டு. இத்தகைய இன்றைய வாழ்வில் ஆரபியைப் பாதித்த பல்வேறு விடயங்களை இக்கதைகளின் வழியே எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார்.

ஏனைய பதிவுகள்

16416 சிறுவர் கதை மலர் : இதழ்2.

மாசில் பிரான்சிஸ். யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், 2/1, கோவில் வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48 B, புளுமெண்டால் வீதி). viii, 120 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

17238 அணிசேரா இயக்கம்: பெல்கிரேட் முதல் ஹராரே வரை.

கண.சுபாஷ் சந்திரபோஸ். கொழும்பு 11: மனோபதி கம்பைன்ஸ் வெளியீடு, 150, கடற் தெரு, 1வது பதிப்பு, 1987. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, கடற் தெரு). x, (14), 36 பக்கம், புகைப்படங்கள்,