ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2009. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
135 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-8715-62-8.
மட்டக்களப்பின் பாரம்பரியப் பண்பாடுகளையும், பேச்சுவழக்கையும், பழக்க வழக்கங்களையும் இன்னமும் பாதுகாத்துப் பேணிவரும் படுவான்கரைக் கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியல் அம்சங்களையும் அந்த மண்சார்ந்த வாழ்க்கை முறைகளையும் படம்பிடித்துக்காட்டும் பத்து கதைகளைக்கொண்ட சிறுகதைத் தொகுதி இது. நாட்டின் நடப்பு, தன்னலம் மறந்தால், ஊனுண்ணும் தாவரம், வகையென்ப வாய்மைக் குடிக்கு, ஊழிற் பெருவலியாவுள?, தேரான் தெளிவு, உடைப்பு, தாழை மலர், நான் நளாயினியில்லை, இயங்கியல் நியதி ஆகிய பத்துத் தலைப்புகளில் இச்சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4572).