த.மலர்ச்செல்வன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மாவட்ட பண்பாட்டலுவலகம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம், கொக்குவில்).
(2), 142 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-4777-02-6.
இந்நூலில் கிழக்கிலங்கையின் படைப்பாளிகளான வி.கௌரிபாலன், திசேரா, ஓட்டமாவடி அறபாத், த.மலர்ச்செல்வன் ஆகியோரின் தேர்ந்த சிறுகதைகள் சில தொகுக்கப்பட்டுள்ளன. வி.கௌரிபாலன் 94களில் மலர்ந்த மாற்றுக் கதைசொல்லி. அையாள மீட்பும் தேடலும் கொண்ட இவரின் கதைகள் எந்தக் கோட்பாடுகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாது பயணிப்பவை. இத்தொகுப்பில் வி.கௌரிபாலனின் திரும்புதல், தடிப்பு, வலச போனவங்க ஆகிய மூன்று கதைகள் இடம்பெற்றுள்ளன. திசேரா (சந்திரசேகரன் தியாகசேகரன்) 1995களுக்குப் பின் தோன்றிய கதைசொல்லி. ஈழத்தில் பரிசோதனை முயற்சிகளினூடாக கதை சொல்லும் ஆற்றல் கொண்டவர். கதைகளுள் உலவும் மனிதன், துர்கதை, வாய்ட்டர்கால் ஆகிய இவரது கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. ஓட்டமாவடி அறபாத் 90களுக்குப் பின்னர் இலக்கிய உலகில் காலடி வைத்த நவீன கதைசொல்லி. இத்தொகுப்பில் இவர் எழுதிய இரு வீடும் மற்றும் அன்ரியும், அந்தி மழை, மண்புழு ஆகிய மூன்று கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. த.மலர்ச்செல்வன் எழுத்து மாற்றம் கொள்ளப்பட்ட 90களில் முகிழ்ந்த படைப்பாளி. மாற்றுக் கருத்தாடல்களையும், புதிய மொழிக் கூறுகளையும் சிறுகதைகளில் நகர்த்திய ஒரு சிலரில் இவரும் ஒருவர். இதுவரை பெரிய எழுத்து (சிறுகதைத் தொகுப்பு), தனித்துத் திரிதல் (கவிதைத் தொகுப்பு) போன்ற பிரதிகளை வெளியிட்டவர். இவர் எழுதிய தக்கையனின் நாட்குறிப்பேட்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நான்கு கதைகள், மண்டையனின் மரணக் கதை, வன தேவதை, முதலாம் பாட்டத்திற்குப் பின் பெய்த இரண்டாவது மழை ஆகிய நான்கு கதைகள் இடம்பெற்றுள்ளன.