வி.ஜீவகுமாரன். சென்னை 600018: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600002: கணபதி எண்டர்பிரைசஸ்).
199 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 21.5×14 சமீ.
யாழ். சங்கானையை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட வி.ஜீவகுமாரன் அவர்கள் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவர். இத்தொகுப்பில் இவர் எழுதிய தவம், சின்னத் தங்கமக்கா, சண்டியனும் சண்டிக் குதிரையும், சாகித்திய மண்டலப் பரிசு, போராட்டம், நானும் எனது திருமணமும், இதற்காகத் தானா?, இரண்டு கண்கள், இன்ரசிட்டி ரிக்கற்றின் விலை 1500, வயதுக்கு, நிவேதாவும் நானும், விடியல், வீடு, சிறையுடைப்பு, தோன்றாத் துணை, நிழல் வாழ்க்கை, பொரிவிளாங்காய், கூலி, என்றும் அன்புடன், நிர்வாண மனிதர்கள் ஆகிய 20 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.