ஏ.எஸ்.உபைத்துல்லா. திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
98 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-4628-43-4.
இந்நூலில் தண்ணீர் தண்ணீர், கொடி பறக்குது, நீலக்கடல் தாண்டி, ஓயாத அலைகள், ஏமாற்றம், ஊர் துறந்து, நிழலைத் தேடி, வாயில்லாப் பூச்சிகள், வாழத் துடிப்பவர்கள், அம்மா என்றால் அன்பு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. தான் பிறந்த மூதூர் மண்ணையும் அதன் மக்களையும் கதாபாத்திரங்களாக்கி கதைகளில் நடமாட விடுவதே இவரின் யதார்த்த வெற்றிக்கு அடி நாதமாக உள்ளது.