முகில்வண்ணன் (இயற்பெயர்: வே.சண்முகநாதன்). கல்முனை: கண்மணி பிரசுரம், இலக்கியபவன், நெசவு நிலைய வீதி, பாண்டிருப்பு-01, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
xii, 13-125 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-54011-9-7.
இத்தொகுப்பில் முகில் வண்ணன் எழுதி ‘சுதந்திரனில்’ பிரசுரமான நீறு பூத்த நெருப்பு என்ற சிறுகதையும், ‘சுடரில்’ வெளியான மன்னிக்க வேண்டுகிறேன் என்ற கதையும், ‘மித்திரனில்’ வெளியான சபதம், இலட்சியப்பாதை, உயர்ந்த உள்ளம் ஆகிய மூன்று கதைகளும், ‘ராதாவில்’ வெளியான வரட்டும் அவர், இனியும் வாழ்வதா?, நினைக்கத் தெரிந்த மனம், அவமானம், எனக்காக வாழண்ணா, பைத்தியம், ஏழையின் நெஞ்சம், நீ இல்லாத உலகத்திலே, இனியும் ஏது இன்பம், புனர்வாழ்வு ஆகிய பத்து கதைகளுமாக மொத்தம் 15 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியரின் மூன்றாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். முன்னதாக 2006இல் ‘அவள் ஒரு தமிழ்ப்பெண்’, 2010இல் ‘இனியும் நான் இராமன் தான்’ ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.