15726 நேற்றைய மனிதர்கள்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி). 

(8), x, 244 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-4041-21-9.

இலண்டனில் வாழும் ஈழத்துப் படைப்பாளி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய பன்னிரு சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும். காங்கிறீட், உடலொன்றே உடமையாக, காதலுக்கு ஒரு போர், ஹிட்லரின் காதலி, நேற்றைய மனிதர்கள், மேதகு வேலுப்போடி, டார்லிங், தொலைந்துவிட்ட உறவு, அப்பாவின் இந்துமதி, மக்டொனால்டின் மகன், முகநூலும் அகவாழ்வும், பேயும் இரங்கும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இந்நூல் 32ஆவது மகுடம் பதிப்பக வெளியீடாகும். ‘இராஜேஸ் பாலா’ அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள கோளாவில் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 1970களில் லண்டனுக்கு புலம்பெயர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலான புலம்பெயர் வாழ்வியல் அனுபவங்களைத் தன்னகத்தே கொண்டவர். மனித உரிமை சார்ந்து அரசியல், சமூகம், பெண் உரிமை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை எனப் பாரம்பரிய வாழ்வியலை மண்ணின் மணத்தோடு எழுத்தில்  பதிந்துவருபவர். நேற்றைய மனிதர்கள் இவரது ஏழாவது சிறுகதைத் தொகுப்பு. தாயகத்தில் வெளிவரும் முதலாவது சிறுகதைத் தொகுப்பும் இதுவே. இவரது கதைகளில் இவரது ஊர் பற்றிய நினைவுகளும், ஊரின் சமய, சடங்கு, சம்பிரதாய முறைமைகளும் ஆங்காங்கே இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

William Hill Kasino Österreich

Content Abschließende Gedanken: Ist und bleibt William Hill Unter allen umständen? Wie Beanspruche Meinereiner Einen William Hill Provision? William Hill Key Features Desto noch mehr